தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள் -நாடாளுமன்றில் அழைப்பு விடுத்தார் டக்ளஸ் தேவானந்தா !.

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள் –
நாடாளுமன்றில் அழைப்பு விடுத்தார் டக்ளஸ் தேவானந்தா !.

பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா,
மக்கள் வாழ்வாதார, சுகாதார, பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மக்களது பிரச்சினைகளை வேறு திசை நோக்கி திருப்பிவிடுகின்ற செயல்களில் போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும், அதிதீவிர போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும் ஈடுப்பட்டு வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.

“எமது மக்கள் முகங்கொடுத்துள்ள உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல், அந்தப் பிரச்சினைகளை மேலும் வளரவிடுவதும்.

இறுதி யுத்தத்தின்போது யார், யார் எங்கிருந்தார்கள் என்பது பற்றி இப்போது அறிக்கை பட்டிமன்றம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அந்த அழிவு ஏற்படக் கூடாது என்ற எனது மனிதாபிமான நோக்கு காரணமாக அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன் பேசுவோம் வாருங்கள் என அப்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களை அழைத்தபோது, அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை.

புலிகள் அழிய வேண்டும் என்ற மனநிலையிலேயே இருந்தார்கள், அதை வெளிப்படையாகக் காட்டாமல், ‘புலிகள் நின்றடிப்பார்கள். விட்டடிப்பார்கள். 40 ஆயிரம் சவப்பெட்டிகளைத் தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதைவிட்டுக் கொண்டு, அழிவுக்கு துணை போனார்கள்.

இந்த நாட்டில் பேரினவாதத்திற்கும் குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளின் இனவாதத்திற்கும் இடையில் ஒப்பந்தங்கள் இருக்கக் கூடாது என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனவே, பதின்மூன்று பேர் சேர்ந்து, எமது மக்களை தொடர்ந்தும் மிதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை ஏற்படுத்தாமல் – எமது மக்களை மதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை இந்த நாட்டில் ஏற்படுத்தவதற்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தன்னுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்…..

Be the first to comment

Leave a Reply