சர்வதேச விசாரணையே தேவை பாராளுமன்றத்தில் கஜேந்திரன் எம் பி

யுத்த் முடிவில் காணாமல் ஆக்கப்பட்ட 147000 பேருக்கும் என்ன நடந்தது என்பதனை கண்டறிய சர்வதேச விசாரணையை கோருகின்றோம். –
நிதி அமைச்சு மீதான விவாதத்தில் இன்று கஜேந்திரன்

நிதி அமைச்சு ஒ.எம்.பி (OMP) ற்கு 2018 ல் 1.4 பில்லியன்கள் நிதி ஒதுக்கி அந்த அலுவலகம் மூலம் மக்களை ஏமாற்றி மரணச் சான்றிதழ் வழங்கும் முயற்சியையே நிதி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
இதுவா ஒரு நாட்டின் நிதி அமைச்சி ன் பணி?

தொல்பொருள் திணைக்களம் என்பது ஏனைய நாடுகளில் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ளபோது இங்குமட்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதற்கான நிதியை நிதி அமைச்சு ஒதுக்கிக் கொடுத்து தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளே மேற் கொள்ளப்படுகின்றது.

முல்லைத்தீவில் வெலி ஓயாவில் 7000 மில்லியன் செலவில் தனிச் சிங்களவர்களுக்கான நீர்ப்பாசனத்திட்டம் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளது நிதி அமைச்சு
இது திட்டமிட்ட இனவாதச் செயற்பாடாகும்.

Be the first to comment

Leave a Reply