மஹர கைதிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மஹர சிறைச்சாலைகள் கைதிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலான விடயங்களை அறிந்து கொள்வதற்காக குறித்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

0112 678 600 தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு மஹர சிறைக்கைதிகள் தொடர்பிலான விடயங்களை அறிந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்திற்கு தலைமை வகித்த மற்றும் அந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கைதிகள் மாத்திரமே வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply