லுவிஸ் ஹமில்டனுக்கு COVID – 19 தொற்று உறுதி

போர்மியூலா வன் (Formula 1) காரோட்டத்தில் நடப்பு உலக சம்பியனான பிரித்தானியாவின் லுவிஸ் ஹமில்டனுக்கு (Lewis Hamilton) COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பின்புலத்தில் லுவிஸ் ஹமில்ட்டன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள Formula 1 காரோட்டத்தின் Sakhir Grand Prix இல் லுவிஸ் ஹமில்டன் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லூவிஸ் ஹமில்டன் Formula 1 காரோட்டத்தில் 6 தடவைகள் உலக சம்பியனாகியுள்ளதுடன் நடப்பு சம்பியனாகவும் திகழ்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Be the first to comment

Leave a Reply