கேகாலைக்கு ஆபத்து – கொரோனாவிவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர்

கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என தெரிவித்து வழங்கப்பட்ட மருந்தினை பெறுவதற்காக ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காணப்பட்டதன் காரணமாக கேகாலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
முழுகேகாலைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மிகப்பெரிய ஆபத்தான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தக்கூடியது என்பது இன்னமும் விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சோதனைகள் ஆய்வுகள் இடம்பெறுகின்றன இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தக்கூடியது என்பது நிரூபிக்கப்பட்டால் நாங்கள் பொதுமக்களிற்கு அறிவிப்போம் அதுவரை பொதுமக்கள் பொறுமையாகயிருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசிற்கான எந்த மருந்தும் விஞ்ஞானரீதியிலான ஆய்விற்கு உட்படுத்தப்படவேண்டியது என குறிப்பிட்டுள்ள அவர் இராஜாங்க அமைச்சர் இந்த மருந்து இன்னமும் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை,ஆகவே மக்கள் மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்னர் எச்சரிக்கையுடன் செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் இந்த நெருக்கடியான தருணத்தில் எச்சரிக்கையுடன் செயற்படாவிட்டால் அதனால் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply