கோட்டாபயவிடம் கையளிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை!

அரசியல் பழிவாங்கும் ஆணையத்தின் அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையானது மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 2 ஆயிரம் பக்கங்களைக் கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் பழிவாங்கலை விசாரிக்குமாறு ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட 198 புகார்களை உள்ளடக்கிய அறிக்கை இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தெரிவு செய்யப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

Be the first to comment

Leave a Reply