கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்: வரவேற்கும் ஆசிரியர் சங்கம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டமை கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் சரியானது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை திகதியை ஒத்திவைக் காது திகதியை நிர்ணயித்தமை கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் சரியானது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நியாயமான திட்டத்தை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கொரிக்கை விடுத்துமுள்ளார்.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் நடத்தப்படவேண்டிய பரீட்சையானது கொரோனா தொற்றியாதல் ஏற்பட்ட தாக்கம் காரணமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுகின்றமையினால் குறித்த பரீட்சை மார்ச் மாதம் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply