யாழில். திருட முற்பட்ட நபரிற்கு நடந்த சம்பவம்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீட்டொன்றில் திருட முற்பட்ட இனந்தெரியாத நபர் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பின் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு புதியசெம்மணி வீதியிலுள்ள வீட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு திருட முற்பட்ட இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப்பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸார் இனந்தெரியாத நபரை பொலிஸ்நிலையம் அழைத்துச் சென்றதோடு மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply