வீடு வீடாக சென்று இலவசமாக வழங்கப்படும் நோய் எதிர்ப்பு பானம்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேசத்தின் பொதுச் சந்தைப் பிரதேசத்தினை அண்டிய பகுதியில் நோய்த் தொற்று நீக்கும் நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, அக்கரைப்பற்று சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து தேகாரோக்கியத்தினை தூண்டும் Immuno Booster பானம் தயாரிக்கும் மூலிகை மருந்துப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விநியோகிக்கப்பட்டன.

Be the first to comment

Leave a Reply