துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரப்படுத்தல் வௌியீடு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவுஸ்திரேலியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வௌிப்படுத்திய திறமைக்கு அமைவாக இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார்.

அதன்பிரகாரம் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் நிரல்படுத்தலில் இரண்டாமிடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரத்ன புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் 14 ஆம் இடத்தில் நீடிக்கிறார்.

Be the first to comment

Leave a Reply