சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!

இருபது வருடங்களை சிறையில் கழித்த மரண தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளதாக கைதிகள் மறுவாழ்வு துறை அமைச்சர் லோகான் ரத்வத்த தெரிவித்திருக்கிறார்.

மரண தண்டனை கைதிகளுக்கு அவர்கள் சிறைகளில் அடைக்கப்படும் காலம் இருபது ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. அதன்படி இருபது ஆண்டுகளை முடித்துள்ள சிறை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற நீதி அமைச்சு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இதற்கான உடன்பாடு ஏட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சிறைச்சாலை அமைப்பில் ஏற்பட்டுள்ள நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் 28 இலும் உரிய வசதிகள் இல்லாத போதும் சுமார் 28 ஆயிரத்து 951 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் லோகான் ரத்தத்தை இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கமைய நாடளாவிய ரீதியில் சுமார் 8 ஆயிரத்து 500 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply