பி.சி.ஆர் பரிசோதனையினை நிராகரிக்கும் மக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கம்பஹா – திஹாரி பகுதியிலுள்ள மக்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளை நிராகரித்து வருவதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா தெரிவித்துள்ளார்.

திஹாரி மக்கள் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பட்சத்தில் குறித்த பகுதியை தனிமைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் அப்பகுதியின் பாதுகாப்பு படையினருடன் கலந்துரையாடிய பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று மாலை 4மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் 94 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பண்டாரகம – அட்டுலுகம பகுதியிலுள்ள மக்களும் பி.சி.ஆர் பரிசோதனைகளை நிராகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply