இன்று திறந்து வைக்கப்படவுள்ள விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்று முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வில், பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கலந்து கொள்கிறார்.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் இந்த மின்னுற்பத்தி மையம் அமைந்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார உற்பத்தியின் ஊடாக, தேசிய மின்சார கட்டமைப்பிற்கு 100 மெகா வோர்ட் மின்சாரம் இணைக்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவிக்கின்றது

Be the first to comment

Leave a Reply