தனிமைப்படுத்தல் பகுதிகளில் ரயில் நிறுத்தப்படாது: புகையிரத திணைக்களம்

கிரிபத்கொட பொலிஸ் பிரிவிலுள்ள வெலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று(7) முதல் ஹுனுப்பிட்டி புகையிரத நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படாது என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் மருதானை, தெமட்டகொட, களனிய மற்றும் பேஸ்லைன் வீதி ஆகிய புகையிரத நிலையங்கள் உட்பட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள புகையிரத நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது என திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Be the first to comment

Leave a Reply