நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 295 பேருக்கு கொரோனா

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றா ளர்களாக அடையாளம் காணப்பட்ட 649 பேரில் 295 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

அவர்களில் 49 பேர் வெள்ளவத்தை பகுதியை சேர்ந் தவர்கள்.

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 87 பேர் அடை யாளம் காணப்பட்டனர்.

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 777 ஆக உயர்ந்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 51 பேர், புத்தளம் மாவட்டத்தில் 50 பேர், குருணாகல் மாவட்டத்தில் 12 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 11பேர், கண்டி மாவட்டத்தில் 08 பேர் மற்றும் காலி மாவட்டத்தில் 08 பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 05 பேர் மற்றும் மாத்தளை மாவட் டத்தில் 04 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, பொலன்னறுவை, முல்லைத்தீவு, மொனரா கலை மாவட்டங்களில் தலா மூவர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளை, அம்பாந்தோட்டை, அம்பாறை, யாழ்ப்பாண மாவட்டங்களில் தலா இருவர் வீதம் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, அனுராதபுர மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவர் உட்பட மேலும் 93 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply