வலி கிழக்கு பிரதேச சபைத் தலைவர் நிரோஷ் கைது செய்யப்படலாம்?

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைவர் தி.நிரோஷ் கைது செய்யப்படலாம் என யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“பிரதேச சபையின் அதிகாரத்தினை நிலைநிறுத்தியமைக்காக என்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நடப்பதாக அறிய முடிகின்றது” என சற்று முன்னர் நிரோஷ் தெரிவித்திருக்கின்றார்.

வலி வடக்கு பிரதேச சபை முன்பாக கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் பெருமளவுக்குக் கூடியிருப்பதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் தெரிகின்றது.

Be the first to comment

Leave a Reply