நாட்டில் தனிமைப்படுத்தல் தொடர்பான சில விபரங்கள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று அதி காலை ஐந்து மணி முதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் புளுமெண்டல் பொ லிஸ் பிரிவு , வெல்லம் பிட்டி பொலிஸ் பிரிவின் விஜயபுர கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலிலிருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளன.

முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட் டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளி காவத்தை, தெமட்டகொடை, மருதானை, ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத் தப்பட்டுள்ளன.

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேகந்த கிராம சேவகர் பிரிவு, பொரளை பொலிஸ் பிரிவிற்குட் பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலமுல்ல கிராம சேவகர் பிரிவு, லக்சத வீடமைப்பு திட்டம் , மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்திய உயன வீடமைப்பு திட்டம் மற்றும் ஃபர்கசன் வீதியின் தெற்கு என்பன தொடர்ந்தும் தனி மைப்படுத்தப்பட்டிருக்கும்.

இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் இன்று காலை 5 மணி முதல் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொம்பனித்தெரு பொலிஸ் பொலிஸ் பிரிவிற் குட்பட்ட ஹூனுப்பிட்டிய கிராம சேவகர் பகுதி, கறுவாத் தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 60ஆம் தோட்டம், வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கோகிலா வீதியும் இன்று காலை 05 முதல் தனி மைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவிற் குட்பட்டகெரவலப்பிட்டி, ஹேக்கித்தை, குருந்துஹேன, எவரிவத்தை மற்றும் வெலிக்கடமுல்ல ஆகிய கிராம சேகவர் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகள் இன்று காலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலியகொடவத்த, பேலியகொட – கங்கபட, மீகஹவத்த மற்றும் பட்டிய வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவு களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகள் இன்று காலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் வெலேகொட – வடக்கு கிராம சேவகர் பிரிவு மாத்திரம் இன்று காலை 5 முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் இன்று காலை 5 மணிக்கு நீக்கப்பட்டதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply