மெனிங் வர்த்தகர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்

கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தையிலுள்ள வர்த்தகர்கள் சிலர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேலியகொட புதிய சந்தைக்கட்டிடத் தொகுதியில் தமக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட இடவசதி, போதுமானதாக இல்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில், பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த போதிலும், இதுவரை எந்தவொரு பதிலும் தமக்கு கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமக்கான பிரச்சினைகளுக்காக தீர்வொன்றை எதிர்பார்த்தே, குறித்த வர்த்தகர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஒன்று கூடினர்.

வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து 10 வர்த்தகர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply