வருகின்றது பண்டிகை காலம்! முழுமையாக கட்டுப்படுத்தப்படுமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

பண்டிகை காலங்களில் மேல் மாகாணம் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வராது, ஆனால் நிலைமை கட்டுக்குள் வரும் வரை நோயாளிகள் பதிவாகும் இடங்கள் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நோயாளிகள் பதிவாகி உள்ளதால் இன்று காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் கொழும்பில் உள்ள மக்கள் பீதியடைய வேண்டாம், சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை, ஆனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பது எப்போதும் நல்லது” என்று சில்வா கூறினார்.

“நோயாளிகள் இருக்கும் இடங்களையும், மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வசிக்கும் இடங்களையும் நாங்கள் கண்டால், வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க அந்த பகுதிகளை உடனடியாக தனிமைப்படுத்துவோம்” என்று சில்வா மேலும் கூறினார்.

அடுத்த வாரத்திற்குள் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் என்றும், மாத இறுதிக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இருப்பினும் இது பொதுமக்களின் நடத்தையைப் பொறுத்தது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் பி.சி.ஆர் சோதனை நடந்து வருகிறது.

பண்டிகை காலத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அடுத்த வாரம் நிலைமையை மறுஆய்வு செய்வதாகவும், தேவையின்றி பொதுக்கூட்டத்தைத் தடுக்க கூடுதல் சுகாதார வழிகாட்டுதல்களை விதிக்க வேண்டும் என்றும் இராணுவத் தலைவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மேல் மாகாணம் முழுதும் கட்டுப்பாட்டு நிலைக்கு வராது, ஆனால் நோயாளிகள் பதிவாகும் பகுதிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்படும் என்றார்.

Be the first to comment

Leave a Reply