பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு கனடா அனுமதி வழங்கிய சில மணி நேரங்களில் முதல் தொகுப்பை வழங்க தயார்!

பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு கனடா அனுமதி வழங்கிய சில மணி நேரங்களில் முதல் தொகுப்பை வழங்க தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பைஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை பிரித்தானியா உலகில் முதல் நாடாக அனுமதி வழங்கிய நிலையில்,

இரண்டாவதாக மத்திய கிழக்கு நாடான பஹ்ரைன் அனுமதி அளித்தது. இந்த வரிசையில் தற்போது கனடாவும் இணையும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய நிர்வாகம் பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாலை 1 மணிக்கு அனுமதி அளித்ததாக கூறும் அந்த நிறுவன முதன்மை அதிகாரி,

அடுத்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

தற்போது தங்கள் நிறுவன தடுப்பூசிக்கு கனடா மிக விரைவில் அனுமதிக்கும் என்றே நம்புவதாக கூறும் அவர்,

கனேடிய நிர்வாகிகளுடனான எங்கள் சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்தது என்றும், கனடா உடன் முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பைஸர் நிறுவன தடுப்பூசி மட்டுமின்றி, இன்னொரு அமெரிக்க நிறுவனமான Moderna மற்றும் AstraZeneca, Jannsen ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசி தொடர்பிலும் கனடா முடிவெடுக்க உள்ளது.

கனடாவுக்கு தேவையான தடுப்பூசி டோஸ்களை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும், அனுமதிக்காக மட்டுமே காத்திருப்பதாகவும் பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடா ஏற்கனவே 20 மில்லியன் டோஸ்களுக்கான ஒப்பந்தம் பைஸர் நிறுவனத்திடம் மேற்கொண்டிருந்தது. மட்டுமின்றி எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை 56 மில்லியனாக அதிகரிக்க செய்யவும் திட்டமிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply