களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா – பொலிசார் அனைவரும் தனிமைப்படுத்தல்

மட்டக்களப்பு களுவாவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்பதுடன் அங்கு கடமையாற்றிவரும் பொலிசார் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் புதிதாக பொலிசார் நியமிக்கப்பட்டு கடமைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அம்பாறை விநாயகபுரத்தைச் சோந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காச்சல் ஏற்பட்ட நிலையில்; அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளதாக நேற்று சனிக்கிழமை இரவு (05) கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் பொது மக்களுக்கான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் அந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 110 பொலிஸ் உத்தியோகத்தரர்களுக்கும் உடனடியாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது

இருந்தபோதும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தங்கிவந்த குவாட்டஸ் உடனடியாக மூடப்பட்டுள்ளதுடன் அந்த குவாட்டஸ்சில் இருந்த 21 பேரை உடனடியாக மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதேவேளை ஏனைய பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் இந்த பொலிஸ் நிலையத்தில் வேறு பொலிஸ் பிரிவிலுள்ள பொலிசாரை தற்காலிகமாக நியமிக்கப்பட்டு பொலிஸ் நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply