மேலும் 10 வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனை

இலங்கையில், மேலும் 10 வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனையினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இரசாயன கூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர், வைத்தியர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக அதிகரிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கமைய 5 அரச வைத்தியசாலைகள் மற்றும் 5 தனியார் வைத்தியசாலைகளுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply