யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் திரு.றுசாங்கன் அவர்களின் சேவைகள்

யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் திரு.றுசாங்கன் அவர்களின் சேவைகளும், பல்கலைக்கழக மாணவர்களின் நலன் கருதி அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும், தற்போதைய காலகட்டத்தில் நமது கல்விசார் சேவைகளில் அவரது பங்களிப்பும்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு சில அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை என்ற பெயரில் யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் திரு. றுசாங்கன் என்பவரின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்துகள் வெளியானது எனினும் அவை அனைத்தும் ஒரு சிலரின் சுயநலத்தின் அடிப்படையில் , தமது கடமையை ஒழுங்காக செய்யத் தவறிய ஒரு சிலரால் வெளியான, அரசியல் பின்புலம் சார்ந்த கருத்துக்களே ஆகும்
தற்போதைய காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் றுசாங்கன் அவர்கள் யாழ் பல்கலைக்கழக ஒழுக்கம் சார்பான விடயங்களுக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர் யாழ் பல்கலைக்கழக முன்னைய மாணவரும் கூட இதை விடவும் கல்வி நிறுவனம் ஒன்றின் மூலம் மகத்தான சேவைகளை எமது கல்விச் சமூகத்திற்காக ஆற்றி வருபவர்

இதைவிடவும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய கல்விசார் நடவடிக்கைகளில் பாரிய அக்கறை கொண்டவர் அதாவது மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியிலுள்ள காலத்திற்கேற்ற தேவைகளை ஈடுகட்டுவதிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டு பல குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை தற்போது முன்னின்று நடத்தி வருகிறார்

இதைவிடவும் மாணவர் நலன் சார்ந்த விடயங்களில் அதிக அக்கறை கொண்டு செயற்படும் ஒருவருமாவார் மேலும் ஒழுக்கம் சார்பாக செயற்பாட்டு அதிகாரியாக செயற்படும் காரணத்தால், யாழ் பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோரின் செயற்பாடுகளில் அதிக கவனம் கொண்டு செயற்பட்டும் வருகின்றார். இதை விடவும் அவர்களின் பிழைகளை துணிவுடன் சுட்டிக்காட்டி, அவற்றைத் தற்துணிவுடன் தட்டிக் கேட்கும் ஒரு நபராகவே உள்ளார். சமீப காலங்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற மாணவர்கள் மற்றும் நிர்வாக மட்டத்தினர் இடையேயான முறுகல் நிலைக்கு மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் இடையான உறவு வேறுபாடே காரணம் என தொடர்ந்தும் உண்மைக் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்தார். இதை விடவும், யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் கல்வி முறையில் பல புது அம்சங்களை தற்போதைய காலகட்டத்தில் உட்புகுத்திய பங்களிப்பும் இவரைச் சாரும்.

ஒழுக்க விடயங்களுக்கு பொறுப்பான பேரவை உறுப்பினர் எனும் காரணத்தால் சில சமயத்தில் ஊடகங்களுக்கு தமது நடவடிக்கைகளை
தெளிவுபடுத்தும் கடப்பாடும் இவரிடம் உண்டு. அதனையும் அவர் செவ்வனே சிய்து வருகின்றார். இதற்குச் சான்றாக தற்போதைய காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் சுயாதீன விசாரணைக்குழுவை அமைத்துத் ஒழுக்கம் விடயங்களில் சமூகத்திற்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டு தமது கடமையைச் செவ்வனே ஆற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது எனினும் சிலர் தமது அரசியல் சுய லாபங்களுக்காகச் சில நாட்களுக்கு முன்பு இவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply