யாழ்ப்பாணத்தில் கடும் மழை! பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது!

யாழ்ப்பாணத்தில் கடும் மழை! பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது!

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக மீண்டும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஏற்கனவே வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளாத பகுதிகளும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பல விற்பனை நிலையங்களுக்குள் மீண்டும் நீர் புகுந்துள்ளது.

அதேபோல நல்லூரில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலும் அதிக நீர் தேங்கியிருக்கிறது.

Related:

கொக்குவில், கோண்டாவில், தாவடி, நல்லூர், கல்வியங்காடு, சாவகச்சேரி உட்பட்ட பகுதிகளிலும் கடும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

சில பகுதிகளில் இருந்து மக்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றிருக்கின்றனர்.

தீவிர மழை பெய்வதற்கான காலநிலை தொடர்ந்தும் காணப்பட்டுவருகின்ற நிலையில் மக்களை அவதானமாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்

Be the first to comment

Leave a Reply