கஜேந்திரகுமாரின் பேச்சுக்கும் சாணக்கியனின் பேச்சுக்கும் உள்ள வேறுபாடு

நாடாளுமன்றத்தில் கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றுகின்ற உரையுடன் சாணக்கியன் பேசுகின்ற விடயங்களை ஒப்பிடு செய்ய முடியாது.

இரண்டும் வேறு தளங்களை அடிப்படையாக கொண்டவை.

கயேந்திரகுமாரின் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைக்குரிய தீர்வு என்பது தமிழரின் தேசத்தை அங்கரித்து, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் கிடைக்கவேண்டும். அரசு ஒரு இனப்படுகொலை செய்துள்ளது. இனப்படுகொலைக்கு தீர்வு என்பது சர்வதேச ரீதியிலான விசாரணை மூலமே சார்த்தியம். அவ்வாறான விசாரணை ஒன்று நடத்தப்பட்டால் அதன் முடிவில் தமிழ் மக்களுக்கு தேசத்தினை அங்கரித்து, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு கிடைக்க வழியமைக்கும் என்பதன் அடிப்படையிலானது.

சாணக்கியனின் உரையானது, சமகால சம்பவங்களுடன் அரசாங்கத்தின் போக்கு தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் உரை!

சுகந்திரத்தினை கோருகின்ற அல்லது சுயாட்சியை கோருகின்ற ஒரு இனத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் மக்களின் மனநிலையை பிரதிபலிப்பது என்பது வேறு, மக்களின் அன்றாட பிரச்சனைகளை அவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது என்பது வேறு.

இரண்டுமே இன்று தேவையானது என்பதில் மாற்றுகருத்து கிடையாது. ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு பேசுவதற்குரியதல்ல என்பதே பார்வை.

இரண்டினையும் ஒரே அளவுகோலில் பார்க்கப்படுவது என்பது அரசியலை புரிந்துகொள்ளாமல், பேச்சாற்றலை உணர்வு பூர்வமாக விரும்புதலையே வெளிப்படுத்தும்.

Be the first to comment

Leave a Reply