யாழில் வீதியில் உடைத்த பூசணிக்காயில் சறுக்கி விழுந்தவருக்கு நேர்ந்த சோகம்

யாழில் வீதியில் உடைத்த பூசணிக்காயில் சறுக்கி விழுந்தவருக்கு நேர்ந்த சோகம்

யாழ் வல்லைச் சந்தியில் சமயச்சடங்கிற்காக வீதியில் உடைத்த நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்திற்குள்ளான ஒரு பிள்ளையின் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யோகநாதன் ஜெகதீஸ்வரன் (43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

கோண்டாவில் மேற்கை சேர்ந்த அவர் கடந்த தீபாவளி நாளில் (14) வடமராட்சி பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து திரும்பி வரும்போது, வல்லைச் சந்தியில், சமயச்சடங்கிற்காக யாரோ உடைத்த நீர்த்துப் பூசணிக்காயில் மோட்டார் சைக்கிள் சிக்கிய நிலையில், எதிரே வந்த காரில் மோதி விபத்திற்குள்ளானார்.

இதனையடுத்து உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது

Be the first to comment

Leave a Reply