பருத்தித்துறை: 2 வயது குழந்தை உள்ளிட்ட மூவருக்கு தொற்றுறுதி! (2ம் இணைப்பு

பருத்தித்துறை: 2 வயது குழந்தை உள்ளிட்ட மூவருக்கு தொற்றுறுதி! (2ம் இணைப்பு)

பருத்தித்துறையில் கடந்த தினத்தில் தொற்றுறுதியான நபரின் ஒரு வயது 7 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை உள்ளிட்ட மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த தினத்தில் தொற்றுறுதியான நபர் அவரது மாமியாரின் மருத்துவ தேவை நிமித்தம் கொழும்பு சென்று திரும்பியிருந்த நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த தினத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்’களிடம் பெறப்பட்டிருந்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டிருதுந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி சற்று முன்னதாக அறிவித்திருந்தார்.

அதற்கமைவாக கடந்த தினத்தில் தொற்றுறுதியான நபரின் ஒரு வயது 7 மாதமே ஆன பச்சிளம் குழந்தை, மனைவி (வயது-29) மற்றும் மாமியார் (வயது – 65) ஆகிய மூவருக்கும் இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய செய்தி….

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பருத்தித்துறையைச் சேர்ந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பரிசோதனை ஆய்வு கூட முடிவுகள் குறித்து வெளியிடும் நாளாந்த அறிக்கையில் மேலம் குறிப்பிட்டிருப்பதாவது,

இன்று (டிச-05) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 315 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு கொழும்பிலிருந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை

Be the first to comment

Leave a Reply