கட்டுநாயக்க விமான நிலையம் ஜனவரியில் திறப்பு?

அதிகரித்த கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தை திறப்பது தொடர்பாக சுகாதார தரப்பினருடன் இன்று வியாழக்கிழமை நடத்திய சந்திப்பை அடுத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை மீளத்திறப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக சுகாதார விதி முறைகளுக்கு அமைய, முதலில் சுற்றுலாப் பயணிகளுக்காகவும், பின்னர் சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் பயணிகளுக்காகவும் விமான நிலையத்தை திறக்க அமைச்சர் இணங்கியிருக்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி மாத ஆரம்பத்தில் விமான நிலையம் திறக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply