நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் நேற்றைய தினம் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந் துள்ளது.

அதன்படி, கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான பெண் ஒருவர் , கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் , கொழும்பு 10 பிரதேசத் தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர், கொழும்பு 10 பிரதேசத் தைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் , கொ ழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் ஆகி யோரே இவ்வாறு அடையாளம் காணப் படடுள்ளனர்.

01. கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு , நீரிழிவு நோய் மற்றும் கொரோனா தொற்றால் 2020 நவம்பர் மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

02. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மற்றும் மூளையில் ஏற்பட்ட இரத்த கட்டி காரணமாக 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

03. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் பாக்டீரியா தொற்று காரணமாக 2020 நவம்பர் 30ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

04.கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பால் வீட்டிலேயே 2020 நவம்பர் 02 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

05. கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொரோனா தொற்று , நிமோ னியா மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் 2020 நவம்பர் 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அதன் படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித் துள்ளது.

Be the first to comment

Leave a Reply