
மஹர சிறைச்சாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மருந்து வில்லைகள் தொடர்பில் விசேட மருத்துவ அறிக்கையை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருந்து வில்லைகளை உட்கொண்டமையினூடாக அதிக கோபத்துடன் கைதிகள் நடந்துகொண்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் உண்மையை கண்டறியும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் நேற்றைய தினமும் 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
Be the first to comment