இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – இராணுவத் தளபதி கடுமையான எச்சரிக்கை

அட்டுலுகம பகுதியில் உள்ளவர்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால், தனிமைப்படுத்தப்படலாம். என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

தன்னிச்சையாக செயற்படும் ஒரு குழுவால் முழு களுத்துறை மாவட்டமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

இன்று (04) காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்தார்.

“அவர்கள் தங்கள் பிரதேசத்தையும் மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அட்டுலுகம தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

ஒரு கிராமத்தில் வாழும் ஒரு குழுவினரின் தன்னிச்சையான முறைகள் காரணமாக சுற்றியுள்ள நகரங்களுக்கும் களுத்துறை மாவட்டத்திற்கும் எந்த அச்சுறுத்தலையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறினார்.

Be the first to comment

Leave a Reply