கைக்குழந்தைகளுடன் குடியிருப்புப் பகுதிகளை விட்டு வெளியேறிய மக்கள்!

ஓமந்தையில் கடந்த சில நாட்களாக வீசி வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வவுனியா வேலங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் 6 வீடுகள் சேதமாகியுள்ளதோடு 4 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் சின்னத்தம்பனை கிராமத்தில் தற்காலிக வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்த காரணத்தினால் வீடுகளுக்குள் கைக்குழந்தைகளுடன் வாழ்வது அபாயமானது எனக் கருதி வேவலங்குளம் கிராமசேவையாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த கிராம மக்கள் தேவாலயம் ஒன்றில் தற்காலிக முகாம் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இம் மக்களுக்கு தற்போது அவசர உதவியாக சமைத்த உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply