மனநோய்க்கான மருந்துகளால் வன்முறை நடத்தைகள் ஏற்படாது – இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம்

மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளினால் வன்முறை நடத்தைகள் ஏற்பட மாட்டாது என இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கைதிகள் பயன்படுத்தியமையே,
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை நடத்தைக்கு காரணம் என கூறுவது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநோய் மற்றும் அது தொடர்பான சிகிச்சைகள் குறித்து இந்த கருத்து மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

Be the first to comment

Leave a Reply