
புனானை நோக்கி 23 கொவிட்-19 நோயாளர்களைக் கொண்டு சென்ற பஸ் ஒன்று காத்தான்குடியிலிருந்து பொலநறுவைக்கு வந்த மற்றொரு பஸ்ஸுடன் வெலிக்கந்த அசேலபுரவில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்த இரண்டு பஸ்களினதும் சாரதிகள் மற்றும் சிறு காயங்களுக்குள்ளான இரு நோயாளிகள் பொலநறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய கொவிட்-19 நோயாளர்களை சிகிச்சை நிலையத்துக்குக் கொண்டு சென்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
Be the first to comment