333 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

இலங்கையில் பாதகமான வானிலை காரணமாக புரெவி சூறாவளியால் கட்டு நாயக்க, விமான நிலையத்தின் சேவைக்கு எந்தவிதமான இடையூறும் இன்று ஏற்பட வில்லை என விமான நிலையத்தின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்றைய தினம் அனைத்து விமானச் சேவை களும் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் மேற்கொள்ளப் பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 333 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

கட்டாரிலிருந்து 49 பேர், ஜேர்தானிலிருந்து 284 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகக் கட்டு நாயக்க விமானநிலையத்திலுள்ள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply