மஹரசிறையில் கொரோனா பரவியது எப்படி – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சஜித்

கொரோனா வைரஸ் விதிமுறைகளைமீறி வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சிறைக்கைதிகள் மஹர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டமையே மஹர சிறையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட்19 தொடர்பான விதிமுறைகளை மீறி வெலிக்கடையிலிருந்து மஹரசிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றப்பட்டமையே சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் பரவலைஉருவாக்கியது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக பதற்றநிலை உருவானது இதற்கு காரணமான நபர் ஜனாதிபதியின் வியத்மஹா அமைப்பைசேர்ந்தவர் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மஹரசிறைச்சாலை கலவரத்திற்கு மறைமுக சக்தியொன்று காரணம் என இந்த நாடாளுமன்றத்தில் முன்னர் தெரிவிக்கப்பட்டது,வேறு சிலர் தங்கள் சொந்த ஆராய்ச்சிகளின் முடிவினை முன்வைத்தனர் போதைமாத்திரையே இதற்கு காரணம் என தெரிவித்தனர் எனவும் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கான முயற்சிஇதுவென சிலர் குறிப்பிட்டனர் எனவும் அவர்தெரிவித்துள்ளார்

எனினும் நிர்வாகத்தில் பாரிய வெற்றிடம் காணப்படுகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது சிறைக்கைதிகள் தாங்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிவத்ற்காக பிசிஆர் சோதனைகளை மாத்திரம் கோரினார்கள் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் விதிமுறைகளை மீறி வெலிக்கடையிலிருந்து 120 கைதிகள் மஹர சிறைக்கு மாற்றப்பட்டனர் என்பதை அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச இந்த கைதிகளிற்கு பொறுப்பாகவுள்ள பிரதி இயக்குநர் வியத் மகாவின் உறுப்பினர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரே கைதிகளை வெலிக்கடையிலிருந்து மஹரவிற்கு மாற்றினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் அறிக்கையில்லை இது உண்மை என குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் கொத்தணி உருவானது இந்த துயரம் இதன்காரணமாகவே உருவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply