மாத்தளை மாநகர மேயர் பதவி நீக்கம்

மாத்தளை மாநகர மேயர் பதவியிருந்து டல்ஜித் அலுவிஹரேயை விலக்க மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்

இதற்கான வர்த்தமானி நேற்று நள்ளிரவு வௌியிடப்பட்டுள்ளது.

மாத்தளை நகர மேயருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தளை நகர மேயராக டல்ஜித் அலுவிஹாரே செயற்பட்ட போது, மாநகர சபை கட்டளை சட்டத்தின் பல சரத்துகளை மீறி செயற்பட்டுள்ளதாக விசாரணை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர மேயர் பதவியிலிருந்து டல்ஜித் அலுவிஹாரே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் மத்திய மாகாண ஆளுநரால் இந்த விசாரணை குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

Be the first to comment

Leave a Reply