யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

சீரற்ற வானியால் யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் 756 குடும்பங்களை சேர்ந்த 2,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 142 குடும்பங்களை சேர்ந்த 550 பேர் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணப்பதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், சாவக்கச்சேரி, பருத்தித்துறை மற்றும் வேலணை ஆகிய பகுதிகளில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் 30 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 200 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள், பிரதேச செயலகங்கள் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.

Be the first to comment

Leave a Reply