மினுவாங்கொடையில் பயங்கரம்! கணவன் மனைவி சடலங்களாக மீட்பு

மினுவாங்கொடையில் ஒபாத என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சடலங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை தெரிவித்தார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக, கணவர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்.

இதில் கணவருக்கு 45 வயது, மனைவிக்கு 37 வயது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கணவனுடன் வாக்குவாதத்திற்குப் பிறகு அந்தப் பெண் தனது இரண்டு மகள்களுடன் தாயார் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

பின்னர் கணவன் தனது மனைவியை மட்டும் அழைத்துக் கொண்டு மினுவாங்கொடையில் உள்ள தமது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply