2010 ஜனாதிபதி தேர்தலில் T.N.Aவாக்களிக்க கூறிய சரத் கொன்சேகாவின் சர்ச்சை கருத்து

சூறாவளி, மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் – சரத் பொன்சேகா

சிவிலியன்கள் இறுதிப்போரில் கொலைசெய்யப்படவில்லை. மாறாக விடுதலைப் புலிகள் இயக்கமே கட்டாயப்படுத்தி சிவிலியன்களை முன்னணியில் நிறுத்தி போராடினார்கள். அப்படியிருந்தும் நாங்கள் பலரையும் மீட்டோம். புனர்வாழ்வுக்கு அனுப்பினோம் என்று சரத் பொன்சேகா கூறினார்.

இதேவேளை மாவீரர் தினத்தை கொண்டாட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் நாடாளுமன்றில் இன்று(03) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம். மக்களுக்கு சேதம் ஏற்பட வேண்டும் என நான் கூறவில்லை. இருப்பினும் மாவீரர்கள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்கமுடியாது.

இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டதாகும். இங்கிலாந்தில் கூட பிரபாகரனின் பதாதையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டபோது பொலிஸாரினால் அகற்றப்பட்டது. எமது நாட்டில் அது செய்திருந்தால் நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு வெளியிட்டிருப்பார்கள். எமது தரப்பிலுள்ள மனோகணேசன் கூட மாவீரர்நாள் குறித்து நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்த போதிலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.

சிலர் ஜே.வி.பியுடன் மாவீரர்களை ஒப்பீடு செய்கிறார்கள். ஆனால் ஜே.வி.பியினர் மிகவும் சிறிதளவான போராட்டத்தை நடத்திய போதிலும் நாட்டைப்பிரிக்க செயற்படவில்லை. மீண்டும் இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை தலைதூக்க இடமளிக்கமாட்டோம்” எனக் கூறினார்

Be the first to comment

Leave a Reply