வத்தளையின் சில பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு

வத்தளையின் சில பகுதிகளில் இன்று (03) காலை 10 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய இன்று காலை 10 மணி தொடக்கம் நாளை (04) அதிகாலை 04 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வத்தளை நீர் விநியோக கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மேம்படுத்தல் நடவடிக்கை காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹேகித்தை, பள்ளியாவத்தை, வெலிஅமுன, பலகல, கலகஹதுவ, மருதானை வீதி, எலகந்த மற்றும் ஹெந்தல வீதி பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply