
கொழும்பு மாவட்டத்தில் பொரளையில் 100க்கும் அதிகமானோரும் கொள்ளுப்பிட்டியில் 42 பேரும் கொவிட்-19 தொற்றாளர்களாக நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு 12இல் 63 பேரும் தெமட்டகொடவில் 30 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு- 13 (29) கொழும்பு -15 (36), கிராண்ட்பாஸ் (16), அவிசாவளை(21) என்ற ரீதியில் தொற்றாளர்கள் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 இறப்பு அதிகரித்து வருவதாலும் அதிக மக்கள் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாலும் கொழும்பின் நிலைமை தீவிரமானது என இந்த வாரம் கொழும்பு மேயர் எச்சரித்திருந்தார்.
அண்மைய கொவிட்-19 இறப்புகள் மற்றும் தொற்றுகள் பெரும்பாலும் கொழும்பு மாவட்டத்திலிருந்து வந்தவையாகும்.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் நேற்றுப் புதன்கிழமை 188 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் கடவத்த மற்றும் நீர்கொழும்பிலிருந்து கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be the first to comment