கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 878 பேரில் 402 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண் டியது.

நேற்றையதினம் கொழும்பு மாவட்டத்தில் 402 பேர் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 10ஆயிரத்து 142 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்றை தினம் பொரளை பகுதியில் 103 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 188 பேர் அடையாளம் காணப்பட்டனர் .

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போதுவரை கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 502 ஆக உயர்ந்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 52 பேர், புத்தளம் மாவட்டத்தில் 29 பேர் , கண்டி மாவட்டத்தில் 27 பேர், குருணாகல் மாவட்ட த்தில் 02 பேர், அம்பாறை மாவட்டத்தில் 21 பேர் ஆகியோர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப் பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 08 பேர் , கேகாலை மாவட்டத் தில் 09 பேர், களுத்துறை மாவட்டத்தில் 08 பேர், காலி மாவட்டத்தில் 06 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 88 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply