நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மேலும் 04 பேர் உயிரிழந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித் துள்ளது.

அதன்படி, கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது ஆண் ஒருவர், கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண் ஒருவர், ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 93 வயது பெண் ஒருவர், கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 81 வயது ஆண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு அடையாளம் காணப் படடுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

01. கொழும்பு 12சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவர் கொ ரோனா தொற்று மற்றும்  பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியால் வீட்டிலேயே 2020 நவம்பர் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

02. கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண் ஒருவர் மூளையில் இரத்த கசிவு மற்றும் கொரோனா தொற்றால் வீட்டிலேயே 2020 நவம்பர் 74 ஆம் திகதி உயி ரிழந்துள்ளார்.

03. ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 93 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றால் இரத்தம் விஷமானது மற்றும் தோல் நோய் காரணமாக வீட்டிலேயே 2020 நவம்பர் 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

04.கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 81 வயது ஆண் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில் , முல்லேரியா வைத்தியசாலை க்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நாட் பட்ட நுரையீரல் நோய் மற்றும் கொரோனா தொற்றால் 2020 நவம்பர் 30ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
.
அதன் படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந் துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரி வித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply