கொரோனா தடுப்பு மருந்தை அங்கீகரித்தது பிரித்தானியா

Pfizer/BioNTech கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை பிரித்தானியா முதல் நாடாக அங்கீகரித்துள்ளது.

COVID – 19 தொற்றிலிருந்து 95 வீதம் பாதுகாப்பளிக்கும் இந்த தடுப்பு மருந்து பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் பாவனைக்கு வருவதாக அந்நாட்டு ஔடக ஒழுங்குபடுத்துநரான MHRA நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் பிரித்தானியாவில் 8 இலட்சம் தடுப்பு மருந்து தொகுதிகள் பயன்பாட்டுக்கு வரும் என சுகாதார செயலாளர் Matt Hancock தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார சேவையினால் தொடர்புகொள்ளப்படும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காப்பகங்களிலுள்ள வயது முதிர்ந்தவர்கள் உள்ளிட்ட அவசிய தேவையுடையோருக்கு சில நாட்களில் நோய்த்தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது.

20 மில்லியன் மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் 20 மில்லியன் தடுப்பு மருந்து தொகுதிகளை பிரித்தானியா ஏற்கனவே கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

Pfizer-BioNTech மற்றும் அமெரிக்காவின் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான மொடர்னாவின் COVID – 19 தடுப்பு மருந்து என்பன 90 வீதம் பலனளிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply