கொரோனா வைரசினை கொழும்பு மக்கள் ஆபத்தான விடயமாக கருதவேண்டும்- ரோசி சேனநாயக்க வேண்டுகோள்

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில்கொரோனா வைரஸ் நிலைமை எவ்வளவு ஆபத்தானதாகயிருக்கமுடியுமோ அவ்வளவு தூரம் ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது நகரமேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்
டெய்லி மிரரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
கொழும்பில் கொரோனா வைரசினை ஆபத்தான விடயமாக மக்கள் கருதவில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நிலைமை எவ்வளவு ஆபத்தானதாகயிருக்கமுடியுமோ அவ்வளவு தூரம் ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது.
நாங்கள் அனைவரும் இது பாரதூரமானவிடயம் என்ற மனோநிலையை கொண்டிருக்கவேண்டும்.
இது ஆபத்தானநிலை – இது ஆபத்தான நிலையில்லை என நீங்கள் தெரிவிக்க முடியாது.
நாங்கள் நாளொன்றிற்கு 991 பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது 249 கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்கின்றோம்,இது ஆபத்தான விடயம்.
கொழும்பு நகரில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஐவர் காணப்பட்டாலும் நான் அதனை ஆபத்தான நிலையாகவே கருதுகின்றேன்
.தற்போதுள்ள விடயம் என்னவென்றால் இதனை மக்கள் ஆபத்தானவிடயமாக கருதுவதில்லை,நான் மக்கள் என தெரிவிக்கும்போது பொதுமக்கள் குறித்தும் தெரிவிக்கின்றேன்.

இது எங்களிற்கு நடக்கப்போவதில்லை என நாங்கள் நினைக்கின்றோம்,இது பாரதூரமான விடயமல்ல.இது அயல்வீட்டின் பூந்தோட்டத்தில் உள்ளது எனது தோட்டத்தில் இல்லை என கருதுகின்றோம்.
ஆகவே இதனை நீங்கள் ஒரு பாரதூரமான விடயமாக ஆபத்தான விடயமாக கருதுங்கள், இதுமிகவும் ஆபத்தான விடயம் என்பதே எனது கருத்து.
அரசாங்கம் கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான அiனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கின்றது.
நாங்கள் தற்போது கட்டுப்படுத்த கூடிய நிலைக்கு வந்துள்ளோம் தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை ஆனால் பாதிக்கப்படுபவர்களின் அளவு மாறவில்லை.

அதேவேளை நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையவில்லை.
சில பகுதிகளில் தொடர்ந்து நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
ஆகவே அனைவரும் கொரோனா வைரஸ் ஒரு சர்வதேச தொற்று ,ஆபத்தானது என்ற மனோநிலையை கொண்டிருக்கவேண்டும்.
இந்த ஆபத்தை மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் எங்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
சிலர் தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை நான் நாளாந்தம் பார்க்கின்றேன்.
வீட்டிலிருந்து வெளியே செல்லவேண்டிய தேவையில்லை என்றால் வீட்டிலிருந்து வெளியே செல்லாதீர்கள்.
நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் கொரோனா நோயாளியாகயிருக்கலாம் என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

Be the first to comment

Leave a Reply