மலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை

மலேசியாவின் பொலிஸின் தலைமை அதிகாரியை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல விடுத்துள்ள விடுதலைப்புலிகளின் பிரதான தளபதி தான் என தெரிவிக்கும் நபர் ஒருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மலேசிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் பிரதான தளபதி என தெரிவித்துள்ள நபர் ஒருவர் மலேசியாவின் பொலிஸ்மா அதிபர் அப்துல் ஹமீட் படுரை சுட்டுக்கொலை செய்யப்போவதாக எச்சரித்;துள்ளார்.

மலேசிய பொலிஸின் தலைமையகத்தையும் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தையும் தாக்கப்போவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார் என மலேசிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மின்னஞ்சல் மூலமாகவே இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய சிஐடி திணைக்களம் தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட நபர் முன்னர் மலேசிய மன்னரை அவமதிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபரை சுட்டுக்கொல்லப்பபோவதாகவும் இலங்கையிலும் மலேசியாவிலும் தாக்குதல்களை மேற்கொள்ளப்போவதாகவும தெரிவித்து குறிப்பிட்ட நபர் பல ஊடகங்களிற்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Be the first to comment

Leave a Reply