
02.12.2020. முற்பகல் 9.45
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புரேவி புயலானது தற்போது முல்லைத்தீவுக்கு தென்கிழக்கே 236 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. முதலே குறிப்பிட்டது போன்று இது முல்லைத்தீவினை அண்மித்தே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது கிடைத்துவரும் மழை இன்று நண்பகலுக்கு பிறகு கனமழையாக மாறும் வாய்ப்புண்டு.
புயல் கரையைக் கடக்கும் வேளை பரவலாக இடிமின்னலுக்கு வாய்ப்புண்டு.
புரேவி புயல் தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் இற்றைப்படுத்தப்படும்.
- நாகமுத்து பிரதீபராஜா-
Be the first to comment