மன்னாரில் பெருமழை … கடல்நீரும் உட்புகுந்தது …

மன்னாரில் பெருமழை … கடல்நீரும் உட்புகுந்தது …

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார் கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது.

மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.
மேலும் மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர் உற்புகுந்துள்ளது. இதனால் அப்பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறிப்பாக இன்று புதன்கிழமை காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த காற்று மற்றும் தொடர்சியான மழை நீடித்து வருகின்ற நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில் உள்ளனர்.
தொடர்சியாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதுடன் கடலை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கடல் நீர் நுழைத்துள்ளமையையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

Be the first to comment

Leave a Reply