யாழில் கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி சாரையடி பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டி இறுகி உயிரிழந்துள்ளார்.

வீட்டு ஜன்னலின் கம்பியில் கழுத்துப்பட்டி கட்டப்பட்டு சுருக்கிடப்பட்ட நிலையில் 09 வயதான சிறுமி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி விளையாட்டாக மேற்கொண்ட விடயம் விபரீதமாக முடிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மந்திகை சாரையடி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply